தமிழ் சினிமா

ரஜினி பிறந்தநாளன்று கோச்சடையான்!

செய்திப்பிரிவு

ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி 'கோச்சடையான்' வெளியாகும் என அறிவிப்பு.

ரஜினி நடிப்பில் 'எந்திரன்' இறுதியாக வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

மகள் செளந்தர்யா இயக்கும் படம், MOTION CAPTURE தொழில்நுட்பம், அரங்கினுள் மட்டுமே படப்பிடிப்பு என்பதால் ரஜினி ஒப்புக்கொண்ட படம் 'கோச்சடையான்'.

லண்டன், கேரளா உள்ளிட்ட இடங்களில் இப்படத்தில் ரஜினியுடன் நடிக்கும் நடிகர்களின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. MOTION CAPTURE தொழில்நுட்பம் என்பதால் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நீண்ட நாட்கள் நடைபெற்றன.

படத்தின் எப்போது வெளியாகும், இசை எப்போது என்பது போன்ற தகவல்கள் எதுவுமே அறிவிக்காமல் இருந்தார்கள். விநாயகர் சதுர்த்தியன்று வெளியான 'கோச்சடையான்' டீஸரில் அக்டோபர் மாதம் இசை வெளியாகும் என்று அறிவித்தார்கள்.

இந்தாண்டு ரஜினி ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக 'கோச்சடையான்' படம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். கடந்தாண்டு ரஜினி பிறந்தநாளன்று 'சிவாஜி 3D' படம் வெளியானது.

இசைக்கு முன்னோட்டமாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய 'எங்கே போகுதோ வானம்' என்ற 'கோச்சடையான்' படத்தின் பாடலை அக்டோபர் 7ம் தேதி வெளியாகவிருக்கிறது.

SCROLL FOR NEXT