தமிழ் சினிமா

மலேசிய பிரதமர் இன்று ரஜினியுடன் சந்திப்பு

செய்திப்பிரிவு

மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் இன்று காலை ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்திக்கிறார்.

மலேசிய பிரதமர் நஜீப் ரசாக், அரசு முறை சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். ஐந்து நாட்கள் பயணமாக வந்துள்ள அவர், சென்னையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இன்று காலை ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது, அரசியல், சினிமா உள்ளிட்டவை குறித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையை அடுத்து டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க மலேசிய பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT