தமிழ் சினிமா

கெளரவ் இயக்கத்தில் உதயநிதி: செப்டம்பரில் படப்பிடிப்பு

ஸ்கிரீனன்

கெளரவ் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தின் நாயகனாக நடிக்க உதயநிதி ஸ்டாலின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

'மனிதன்' படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவான படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் உதயநிதி ஸ்டாலின். தேதிகள் பிரச்சினை காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் புதிய படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார். அப்படத்தின் இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை.

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தைத் தொடர்ந்து கெளரவ் இயக்கத்தில் உருவாகும் படத்தின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை செப்டம்பரில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். 'தூங்கா நகரம்' மற்றும் 'சிகரம் தொடு' படங்களின் இயக்குநர் கெளரவ் என்பது குறிப்பிடத்தக்கது

அதற்குள் உதயநிதி உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

SCROLL FOR NEXT