தமிழ் சினிமா

உறுதியானது வெங்கட்பிரபு - சூர்யா கூட்டணி

ஸ்கிரீனன்

லிங்குசாமி படத்தில் நடித்து முடித்தவுடன், வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

கார்த்தி நடித்திருக்கும் 'பிரியாணி' டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது. வெங்கட்பிரபு இயக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

'பிரியாணி' படத்தினைத் தொடர்ந்து, புதுமுகங்கள் நடிக்கும் படத்தினை வெங்கட்பிரபு இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அதனை யாரும் உறுதி செய்யவில்லை.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு 'பிரியாணி' படத்தை பார்த்து விட்டு வெங்கட்பிரபுவை சூர்யா பாராட்டியதாகவும், தனக்காக கதை ஒன்றை தயார் செய்யும்படி கேட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

தற்போது அச்செய்தியினை உறுதி செய்திருக்கிறார்கள். லிங்குசாமி படத்தை முடித்தவுடன், வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். யுவன் இசையமைக்க இருக்கும் இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது.

சூர்யாவுடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT