தமிழ் சினிமா

நெட்டிசன் நோட்ஸ்: கபாலி டிக்கெட்டும் பேங்க் லோனும்!

ஸ்கிரீனன்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் 'கபாலி' படத்தின் முதல் நாள் டிக்கெட்டுக்கு கடுமையாக போட்டி நிலவி வருகிறது. பல்வேறு திரையரங்குகளில் அதிகமான விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரசிகர்கள் குறைகூறியுள்ளனர்.

அதிக விலை டிக்கெட் விற்பனை குறித்து ட்விட்டர் தளத்தில் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ட்விட்டரில் கொட்டப்பட்ட பல பதிவுகளில் இருந்து ஒரு சிறு தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

₹2500க்கு கபாலி டிக்கெட் வாங்கினேன் என்றான் மகன். அந்தப் பணத்தில் நம் கால் ஏக்கர் நிலத்துக்கு விதை நெல் வாங்குவேனே என்றார் அந்த ஏழை விவசாயி

கபாலி டிக்கெட் 600ருவாய் என்று சொன்ன அந்த இளைஞனிடம் பரவால அதே ரஜினி தான நான் படையப்பா போட்டு பார்த்துக்கிறேன் என்றார் அந்த ஏழை விவசாயி

பியூஸ் பிரச்சனை முடியாம நாங்க கபாலி பாக்க மாட்டோம்னு சொன்னா போதும், தாணு நேரடியா தலையிட்டு அந்த பிரச்சனைய முடிச்சிடுவார்.

தியேட்டர்ல கபாலி படம் பாக்கும் போது கத்தாதிங்க !!! லேப்டாப்ல பாக்கும் போது கஷ்டமா இருக்கும் ://

மாதகடைசியில் #கபாலி படத்தை ரிலீஸ்செய்து என்னைபோன்ற நடுத்தர ரசிகர்களை தவிக்கவிட்ட தானுக்கு பாடம் புகட்டியாக வேண்டும்

ரஜினிக்கும்..ரஞ்சித்துக்கும் இது ஒரு "நாயகனாக" அமைந்திட விருப்பம்..#கபாலி

கபாலி படத்திற்காக தொழிலாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் நிறுவனங்கள் தொழிலாளர்களின் PF&PENSION போராட்டத்திற்கு விடுப்பளிக்காதது ஏன்

கபாலி மாஸ் ஹிட் ஆனா ரஜினிதான் காரணமாக இருக்க முடியும். அதே படம் சொதப்பிட்டா, ரஞ்சித் மட்டுமே முழு காரணமாக இருக்க முடியும். #எஸ்கேப்பிசம்

கபாலி டிக்கெட் வேனுமா 2500ரூபாய் என்ற உதவியாளரிடம் அடேங்கப்பா அந்த காசுல ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிடுவேனே என்றார் காமராசர்

சமூக வலைதளங்களில் "கபாலி" குறித்து கருத்து சொல்லக்கூடாது-னு உயர்நீதிமன்றம் உத்தரவு போடும்-னு காத்துக்கிட்டிருக்கோம்!

கபாலி படத்துக்கும் மட்டும் திடீா் திடீா்னு நீதிபதி தீா்ப்பு தெரிவிக்கிம்போது உள்ளுா் லோக்கல் பஞ்சாயத்து நாட்டாமை நம்மபக்கம் என குறிக்கிறது

ரசிகர்கள் விரும்பியே அதிக கட்டணம் கொடுப்பதால் #கபாலி படத்தை தடை செய்ய முடியாது - நீதிபதி | ரசிகர்கள் விரும்பியே திருட்டு விசிடி வாங்குவதால்..

கபாலி First Day பாக்கபோறவன் ரெண்டே விதம் தான்✌ ஒருத்தன் 700 ரூபாய்ல பாக்றவன்.. இன்னொருத்தன் 700MPல பாக்குறவன்

'கபாலி' பட ரிலீஸை 22ம் தேதி தேசிய விடுமுறை? முகநூல் ஆர்வலர்கள் கோரிக்கை?

தியோட்டர்களில் சிறப்பு காட்சி கபாலி டிக்கெட் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது! # அது சரிப்பா... டிக்கெட் ஒண்ணு நாலாயிரமா? எட்டாயிரமா?

ஓசியா கபாலி டிக்கெட் கிடைக்கவில்லை எனில் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறுவழியில்லை!!! ஓபனிங் ஷோ பாக்காமல் ஒரு தமிழனா எதுக்கு சார் உயிரோடு இருக்கனும்!!

கபாலி டிக்கெட் 300 ரூபாயா? என்ன அநியாயம்..ஒரு ஆயிரம் இரண்டாயிரம் வச்சாத்தானே ஒரு கெத்து

இனி மேல் கபாலி டிக்கெட் வாங்கிட்டனு ஓரு குருப்பு டிக்கெட்டோட போட்டோ போடுவானுங்க... அத நெனச்சா தான் வெருப்பா இருக்கு...

கபாலி டிக்கெட் 1500 ரூபாய்.

ஒரு மூட்டை அரிசி எடுத்துப் போட்டா 1 மாசத்த தள்ளிரலாம்...கறியா எடுத்தாலும் 3 நாள் சாப்பிடலாம்... நல்லதா ஒரு பேன்ட், சர்ட் எடுத்துக்கலாம்... பெட்ரோல் போட்டா 1 மாசத்த தள்ளிரலாம்... ரீசார்ஜ் பண்ணா 3 மாசத்த தள்ளிரலாம்..போங்கப்பா..

கபாலி என்ற சினிமா படம் வெளியாவதற்கு முன்பாகவே ஏதோ தமிழ்நாட்டின் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது போல் தமிழ்நாடு இளைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். படம் வெளியாவதற்கு முன்பாகவே டிக்கெட் விலை 500,1000 என்று தகவல் வருகிறது.

திருட்டு விசிடியில் படம் பார்க்காதீர்கள் என்று சொல்லும் நடிகர்களே, உங்களுக்கு தைரியமும், சமூக பொறுப்பும் இருந்தால் தியேட்டர் உரிமையாளரிடம் டிக்கெட் விலையை அரசு நிர்ணயித்தப்படி கொடுக்கச் சொல்ல முடியுமா?

சில மாதங்களுக்கு முன் கடை கடையாக சென்று திருட்டு விசிடியை ஒழிப்பேன் என்று சொன்ன விஷால் அவர்களே, உங்களால் தியேட்டரின் முறையான டிக்கெட் கட்டணத்தை நடைமுறைக்குக் கொண்டு வர முடியுமா? நீங்கள் சரியாக இருங்கள்; மக்களாகிய நாங்களே திருட்டு விசிடியை ஒழிப்போம்..

நா வந்துட்டன்னு சொல்லு; திரும்பி வந்துட்டன்னு சொல்லு..! கபாலி டிக்கெட் 600 ரூபான்னு சொன்னதும் டிக்கெட்டுக்கு காசு இல்லாம அப்டியே திரும்பி வந்துட்டன்னு சொல்லு.... கபாலி டா... காசு இல்லடாஆ..

போற போக்க பாத்தா "கபாலி" பட டிக்கெட் வாங்க SBI, ICICI, HDFC பேங்கெல்லாம் லோன் கொடுப்பாங்க போல!!!போதும்பா உங்க அட்ராசிட்டி.

கபாலி டிக்கெட் 2000 ரூபாய்க்கு விக்குதாம்! பார்லிமென்ட்லே இது பற்றி யாராவது கேள்வி கேட்பாங்களா?

கலைப்புலி தாணு அவர்களுக்கு...

அரசாங்கம் நிர்ணயித்த 120 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்ய சொல்லுங்கள். பைக் பார்க்கிங் 50, கார் பார்க்கிங் 100 போன்ற கொள்ளையைக் கட்டுப்படுத்துங்கள். 10 ரூபாய் பெறாத பாப்கார்னை 100 ரூபாய்க்கு விற்கிறார்கள்; அதைக் கேளுங்கள். இதையெல்லாம் தட்டிக்கேளுங்கள். இந்த தொல்லைகள் இல்லையென்றால் மக்கள் விரும்பி திரையரங்கம் வந்து சினிமா பார்ப்பார்கள்

கபாலி டிக்கெட் முன்பதிவு தொடங்கியது... இணையதள சேவை முடங்கியது.

SCROLL FOR NEXT