‘எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி கமல்’ என்ற பெயரில் குறும்படம் எடுக்க இருப்பதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை வனிதா, புதன்கிழமை காலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எனது பெற்றோர் ‘வனிதா சினிமா புரொடக்ஷன்’ என்ற நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தனர்.
பின்னர் படம் தயாரிப்பதை விட்டுவிட்டனர். இப்போது அந்த நிறுவனத்தை நான் மீண்டும் தொடங்கி நடத்துகிறேன். முதல்கட் டமாக 'எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல்' என்ற பெயரில் குறும்படம் தயாரிக்கிறேன்.
சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த இருக்கிறோம். இதற்காக காவல் துறையின் அனுமதி கேட்டு மனு கொடுத்திருக்கிறேன்.
இவ்வாறு வனிதா கூறினார்.