தமிழ் சினிமா

வை ராஜா வை-யில் கவுரவத் தோற்றத்தில் தனுஷ்

ஸ்கிரீனன்

மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் 'வை ராஜா வை' படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் '3'. தனுஷ் தயாரித்திருந்த இப்படத்தில்தான் இசையமைப்பாளராக அனிருத் அறிமுகமானார். பாடல்கள் பெரும் பெற்றாலும், படம் போதிய வரவேற்பு பெறவில்லை.

'3' படத்தைத் தொடர்ந்து கெளதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி, விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'வை ராஜா வை' படத்தை இயக்கி வந்தார். நீண்ட நாட்களாக படத்தயாரிப்பில் இருந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்து "'வை ராஜா வை' கதையை கேட்டு விட்டு, கெளரவ வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டமைக்கு தனுஷிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு கலகலப்பாக இருக்கப் போகிறது" என்று ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT