தமிழ் சினிமா

வணக்கம் சென்னை - முதல் நாள் முதல் அனுபவம்

ஸ்கிரீனன்

சமீபத்திய காமெடி வகையறா படங்களில், இன்னும் ஒரு படமாகக் கொடுத்திருக்கிறார், அறிமுக இயக்குனர் கிருத்திகா உதயநிதி.

லண்டன் பொண்ணு ப்ரியா ஆனந்த். மதுரைப் பையன் சிவா. ஏற்கெனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ப்ரியா ஆனந்த், புகைப்படக் கண்காட்சிக்காக சென்னை வருகிறார். வந்த இடத்தில், அவரும் சிவாவும் எப்படி வயப்படுகிறார்கள், எப்படி ஒன்றுசேர்கிறார்கள் என்பதை காமெடியாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.

இடைவேளைக்குப் பிறகு சந்தானம் காமெடி மழையில் நனையப் போகிறோம் என்று நம்பி நிமிர்ந்து உட்கார்ந்தால், சாரி, வெறும் தூரலோடு முடிந்துவிட்டது.

பாடல்கள் ஏற்கெனவே ஹிட். தனக்கான வேலையை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் இளம் இசையமைப்பாளர் அனிருத்.

படத்தில் சபாஷ் வாங்குவது ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதன் தான். 'ஏ பெண்ணே' பாட்டு ஒண்ணே போதும் - அவர் திறமைக்கு ஒரு சோறு பதம்.

'ராணுவ' நாசர், 'போலீஸ்' ஊர்வசி என ஆங்காங்கே பலர் காமெடி பீஸ்களாகிறார்கள்.

தியேட்டரை விட்டு வெளியே வந்தவர் சொன்ன கமென்ட்...

'ஒருமுறை பார்க்கலாம்!'

SCROLL FOR NEXT