ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கங்கை அமரனுக்கு வாக்கு சேகரிப்பதை ஆதரிக்கவில்லை என்று யுவன் பதிலளித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாஜக-வின் வேட்பாளராக கங்கை அமரன் நிறுத்தப்பட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் முடித்துவிட்டு, தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் கங்கை அமரன்.
கங்கை அமரனுக்கு ஆதரவாக பிரேம்ஜி அமரன், வாசுகி பாஸ்கர் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் கலந்து கொண்டனர். இதனை வாசுகி பாஸ்கர் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரிந்திருந்தார்.
இதனை குறிப்பிட்டு இசையமைப்பாளர் யுவன் 'இதனை நான் ஆதரிக்கவில்லை' என்று தெரிவித்தார். உடனடியாக வாசுகி பாஸ்கர் தன்னுடைய ட்வீட்டையும் நீக்கிவிட்டார்.
கங்கை அமரனின் மகன்களான வெங்கட்பிரபு, பிரேம்ஜி இருவரோடு மிகவும் நட்போடு பழகிவருபவர் யுவன். மேலும், வெங்கட்பிரபு இயக்கிய அனைத்து படங்களுக்கும் யுவன் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
யுவன் ஆதரிக்கவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்திருப்பது, கங்கை அமரன் குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.