தமிழ் சினிமா

சுதந்திர தினத்தன்று சூர்யாவின் அஞ்சான்

ஸ்கிரீனன்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வரும் 'அஞ்சான்' திரைப்படம் சுதந்திர தினத்தன்று வெளிக்கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, வித்யூத், விவேக் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'அஞ்சான்'. யுவன் இசையமைத்து வரும் இப்படத்தினை லிங்குசாமி தயாரித்து வருகிறார். யு.டிவி நிறுவனம் இப்படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது.

மும்பையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இப்படத்தினை வெளியிட இருக்கும் யு.டிவி நிறுவனத்தின் தென்னிந்திய பொறுப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டர் தளத்தில் "'அஞ்சான்' படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் லிங்குசாமியிடம் நீண்ட நேரம் உரையாடினேன். ஆகஸ்ட் 15ம் தேதி 'அஞ்சான்' வெளியாகும். பெரிய பட்ஜெட் படம் என்பதால் பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறோம்.

'அஞ்சான்' படப்பிடிப்பு இன்னும் 30 நாட்களுக்கு மும்பையில் நடைபெறும். அதோடு படத்தின் 80% படப்பிடிப்பு முடிந்து விடும். ஏப்ரல் 14ம் தேதி முதல் மீதமுள்ள படப்பிடிப்பு இருக்கும்.

தமிழ் புத்தாண்டு அன்று 'அஞ்சான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும். எங்களது அடுத்த வெளியீடான 'நான் சிகப்பு மனிதன்' படத்துடன் 'அஞ்சான்' டீஸரை இணைக்க முயற்சிகள் செய்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT