'அண்ணாதுரை' மற்றும் 'காளி' என ஒரே வேளையில் இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.
'எமன்' படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் விஜய் ஆண்டனி. அப்படத்தின் கதாபாத்திரத்துக்காக தயாராகி வந்தார்.
இதனிடையே கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவிருப்பதாக தனது ட்விட்டர் பகக்த்தில் உறுதிப்படுத்தியிருந்தார் விஜய் ஆண்டனி.
தற்போது ஸ்ரீனிவாசன் இயக்கும் 'அண்ணாதுரை' மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கும் 'காளி' என 2 படங்களிலும் ஒரே வேளையில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.
'அண்ணாதுரை' படத்தின் படப்பிடிப்பு 30 நாட்களும், 'காளி' படத்தின் படப்பிடிப்பு 10 நாட்களும் முடிவுற்றுள்ளது.
'சலீம்' படத்தை அடுத்து 'அண்ணாதுரை' படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.