தமிழ் சினிமா

நடிகர் சிட்டிபாபு கவலைக்கிடம்

செய்திப்பிரிவு

வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்த நடிகர் சிட்டிபாபுவுக்கு (வயது 49) கடந்த திங்கட்கிழமை திடீரென்று மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை முகப்பேரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். 
 மூளையில் உண்டான கட்டி காரணமாக தொடர் சிகிச்சைக்கு பிறகும் அவரது உடல்நிலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து அவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை மாலை அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT