சிம்பு, தனுஷ் இருவருமே, இனிமேல் எங்களுக்குள் சண்டை என்று யாராலும் சொல்ல முடியாது என்று நிரூபித்திருக்கிறார்கள்.
தமிழ் திரையுலகின் தற்போதைய பிஸி பாய் ஆக வலம் வருபவர் சிம்பு. பிப்ரவரி 3ம் தேதி பிறந்த நாள், பிப்ரவரி 10ம் தேதி தங்கை இலக்கியா திருமணம், பாண்டிராஜ் படத்தின் படப்பிடிப்பு, கெளதம் மேனன் படத்தின் படப்பிடிப்பு என பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார் சிம்பு.
ஜனவரி 19ம் தேதி சிம்பு தனது ட்விட்டர் தளத்தில், "இன்னும் இரண்டு வாரத்தில் 30 வயதை தொடவிருக்கிறேன்.." என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து சிம்பு, தனுஷ் இருவரது ட்விட்டர் பேச்சுகள் அப்படியே:
தனுஷ் : வா.. தம்பி...அது ஒண்ணும் அவ்ளோ மோசமில்லை..
சிம்பு : வரேன்.. வரேன்..
சிம்பு : 'வாலு' மற்றும் 'வேலையில்லா பட்டதாரி' படங்களின் இசை பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருக்கிறது. இரண்டு படங்களின் இசையும் வரவேற்பை பெறவேண்டும்.. எங்களது ரசிகர்களிடையே ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கும் என்று நம்புகிறேன்.
தனுஷ் : நீண்ட நாட்களாக Vs என்ற வார்த்தை நம்ம இருவரின் பெயர்களுக்கிடையே வரவில்லை என்று நினைக்கிறேன். சரி அப்புறம் இன்னைக்கு பி.எஸ்4 FIFA ஆன்ல இருக்கும்தானே?
சிம்பு : ரொம்ப நாளாச்சு.. போட்டிக்கு ரெடியா.. இன்னைக்கு வீட்டிற்கு கண்டிப்பாக வரவும்.. FIFA தெரிக்கிறோம்..
இவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டதை பாத்தும் இனிமேல் யாராவது சொல்லுவாங்களா.. சிம்புவிற்கும் தனுஷுக்கும் மோதல் அப்படினு?