நடிகர் அஜித் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில், நகைச்சுவை நடிகர் விவேக்கும் அஜித் போலவே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றவுள்ளார். இந்த செய்தியை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விவேக் பகிர்ந்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில், அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம் 'என்னை அறிந்தால்'. படம் குறித்த சிறு சிறு தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன. தற்போது, இத்திரைப்படத்தில் அஜித் உடன் நடித்து வரும் நடிகர் விவேக், தானும் அஜித்தும் ஒரே கெட்டப்பில் தோன்றவுள்ளதாகக் கூறியுள்ளார்.
இது பற்றி ட்விட்டரில், "இது அஜித்தின் யோசனை. நாங்கள் இருவரும் ஒரே கெட்டப்பில் தோன்றுகிறோம். இதற்கு மேல் இதைப் பற்றி எதுவும் சொல்ல இயலாது" என பகிர்ந்துள்ளார். மேலும் அந்தக் கெட்டப்பில் தனது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.