தமிழ் சினிமா

பிரபல நடிகர் மீசை முருகேசன் காலமானார்

செய்திப்பிரிவு

பிரபல நடிகரும் இசைக் கலைஞரு மான மீசை முருகேசன் உடல் நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.

‘உன்னால் முடியும் தம்பி’, ‘ஊமை விழிகள்’ உட்பட நூற்றுக் கும் மேற்பட்ட படங்களில் நடித் தவர் மீசை முருகேசன் (87). திரைப் படங்களில் நடிப்பதுடன் மோர்சிங், கஞ்சிரா, தவில், கடம் போன்ற இசைக் கருவிகளையும் அவர் வாசித்து வந்தார். அத்துடன் புதுப் புது கருவிகளை உருவாக்கி அதன்மூலம் திரைப்படங்களுக் கான சிறப்பு சத்தங்களையும் கொடுத்து வந்துள்ளார். இவரது கலைச்சேவையை பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருதையும் வழங்கியுள்ளது.

இவர் சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவியும் 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு வளசரவாக்கத்தில் உள்ள மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT