தமிழ் சினிமா

ஜெயம் ரவி ஜோடியாக ராகினி!

ஸ்கிரீனன்

'நிமிர்ந்து நில்' படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராகினி திவேதி (Ragini Dwivedi) நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி இருவேடங்களில் நடித்து வரும் படம் 'நிமிர்ந்து நில்'. சரத்குமார், அமலா பால், சூரி மற்றும் பலர் நடிக்க சமுத்திரக்கனி இயக்கி வருகிறார். இப்படம் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. தெலுங்கில் ஜெயம் ரவி வேடத்தில் நானி நடித்து வருகிறார்.

இரு வேடம் என்பதால், ஒரு வேடத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. மற்றொரு வேடத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராகினி நடித்து வருகிறார். இந்த வேடத்தில் ஜெயம் ரவி எப்போது வாயில் பான்பார்க் போட்டுக் கொண்டே இருப்பாராம்.

கன்னடத்தில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் ராகினி. முதன் முறையாக தமிழில் நடிக்கும் படம் 'நிமிர்ந்து நில்'.

தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ஆக்‌ஷன் காட்சி ஒன்றை படமாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் நெடுஞ்சாலையில் இக்காட்சியினை படமாக்கி இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT