தமிழ் சினிமா

சங்கமித்ரா அப்டேட்: நாயகியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை

ஸ்கிரீனன்

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் 'சங்கமித்ரா' படத்தில் நடிக்க ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புடன் தயாரிப்பில் இருக்கும் படம் 'சங்கமித்ரா'. விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படுவதற்காக, ஹைதராபாத்தில் அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, இப்படத்திலிருந்து விலகினார் ஸ்ருதிஹாசன். தனது கதாபாத்திரத்துக்காக லண்டன் சென்று பல்வேறு பயிற்சிகளை கற்றுக் கொண்டவர் விலகவே சர்ச்சை உருவானது.

தற்போது, 'சங்கமித்ரா' என்ற பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 'சங்கமித்ரா' படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா நடிக்கவிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். கலை இயக்குநராக சாபுசிரில் பணிபுரிந்து வருகிறார். பெரும் பொருட்செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

SCROLL FOR NEXT