மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்துக்கு "காற்று வெளியிடை" என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிதி ராவ் நாயகியாக நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
இப்படத்தின் கதாபாத்திரத்துக்காக கார்த்தி உடலைக் குறைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கமாக ஊட்டியில் ஒரு பாடலை படமாக்க இருக்கிறார்கள். இவ்வருட இறுதியில் படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.
படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்.ஜே.பாலாஜி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.