தமிழ் சினிமா

முதல்வரை சந்தித்து லாரன்ஸ் வலியுறுத்திய 3 கோரிக்கைகள்

ஸ்கிரீனன்

ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பாக தமிழக முதல்வரைச் சந்தித்து லாரன்ஸ் 3 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு ஆதரவாக இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள். மெரினாவில் நடத்த போராட்டத்தில் இளைஞர்களுக்கு ஆதரவாக துணை நின்றவர் லாரன்ஸ்.

நேற்று மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் சிலரோடு முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். முதல்வரிடம் என்ன கோரிக்கை வைத்தார் என்பதை அறிக்கையாக வெளியிட்டார் லாரன்ஸ்.

அதில் லாரன்ஸ் கூறியிருப்பது, "நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம். ஒரு முக்கியமான தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நானும், மெரினாவில் போராடிய சில இளைஞர்களும், நேற்று முதல்வரை சந்தித்து சில கோரிக்கைகளை வைத்துள்ளோம்.

முதல் கோரிக்கை போராட்டம் செய்ததால் கைது செய்யப்ப்ட்ட மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது. இரண்டாவது, இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ உதவி. நமது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கொண்டாடப்பட வேண்டும். மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் இந்த வெற்றியை அமைதியாகக் கொண்டாட அரசு உதவ வேண்டும் என்பதே மூன்றாவது கோரிக்கை. ஜல்லிக்கட்டை திரும்பக் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் எடுத்த முதல்வர் அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். தமிழக மக்களோடு சேர்ந்து, நானும் காத்திருக்கிறேன்.

நமது முதல்வர் கைதான மாணவர்களை விடுதலை செய்து மருத்துவ வசதிகள் செய்து தருவார் என்றும், வெற்றியைக் கொண்டாட்ட ஆவண செய்வார் என்றும் தமிழக மக்களோடு சேர்ந்து, நானும் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

SCROLL FOR NEXT