தமிழ் சினிமா

அஜித் ரசிகர்கள் Vs விஜய் ரசிகர்கள்

ஸ்கிரீனன்

அஜித், விஜய் ரசிகர்களிடையே கட் அவுட்டுகள், பேனர்கள் வைப்பதில் போட்டி வலுத்து, மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

அஜித்தின் 'வீரம்', விஜய்யின் 'ஜில்லா' ஆகிய படங்கள் ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கிறது. தங்களது தலைவர் படம் வெளிவருவதால் அஜித், விஜய் ரசிகர்கள் கட்-அவுட்கள், பேனர்கள் வைத்து வருகிறார்கள்.

ஒரே ஏரியாவில் இருக்கும் ரசிகர்களுக்கு இடையே கட்-அவுட்டுகள், பேனர்கள் வைப்பதில் மோதல் ஏற்பட்டு வருகிறது. மதுரையில் 'ஜில்லா', 'வீரம்' படங்கள் பற்றி சுவர் விளம்பரம் செய்தபோது தகராறில் ஈடுபட்டனர். சேலத்திலும் மோதல் நடைபெற்று இருக்கிறது. சென்னையில் திரும்பிய இடமெல்லாம் தங்களது தலைவர் பேனர் தான் இருக்கவேண்டும் என்று களத்தில் இறங்கியிருக்கிறார்கள் அஜித், விஜய் ரசிகர்கள்.

அதுமட்டுமன்றி, சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய் ரசிகர்களிடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. ஒருவரது ரசிகர்கள் மற்றொருவரை கிண்டல் செய்து தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இவ்வாறு ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், ஆஸ்திரேலியாவில் ஒய்வெடுத்து வருகிறார் அஜித். 'ஜில்லா' படத்தின் இறுதிகட்ட பணிகளிலும், அடுத்து நடிக்கவிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய்.

SCROLL FOR NEXT