மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 'விக்ரம் வேதா' படத்தை ஜூலை 7-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
புஷ்கர் - காயத்ரி இணை இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'விக்ரம் வேதா'. ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்று, இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
விரைவில் தணிக்கைக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளார்கள். தணிக்கை பணிகள் முடிவடைவதைப் பொறுத்து, வெளியீட்டுத் தேதியை முடிவு செய்ய படக்குழு எண்ணியுள்ளது. தணிக்கை பணிகள் உடனடியாக முடிவடைந்து விட்டால், ஜூலை 7-ல் வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளது.
இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். வினோத் ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு சாம் இசையமைத்துள்ளார். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது. காவல்துறை அதிகாரியாக மாதவனும், தாதாவாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.