தமிழ் சினிமா

தள்ளிப் போகும் அச்சம் என்பது மடமையடா!

ஸ்கிரீனன்

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் 'அச்சம் என்பது மடமையடா' பட வெளியீட்டு தேதி மீண்டும் மாற்றப்பட்டு இருக்கிறது.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'அச்சம் என்பது மடமையடா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை 'ஒன்றாக என்டர்டெயின்மன்ட்' நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் கெளதம் மேனன்.

இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. தெலுங்கில் நாக சைந்தன்யா நாயகனாக நடித்திருக்கிறார். தமிழில் 'தள்ளிப் போகாதே' பாடல் படப்பிடிப்பு மட்டும் பாக்கியிருக்கிறது. விரைவில் இப்பாடல் படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது.

ஒரே தேதியில் இரண்டு படங்களையும் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தெலுங்கில் நாக சைந்தன்யா நடித்திருக்கும் 'ப்ரேமம்' ரீமேக்கும் வெளியீட்டு முயற்சியில் இருக்கிறது.

'அச்சம் என்பது மடமையடா' வெளியீடு செப்டம்பர் 9ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார் கெளதம் மேனன். ஆனால், தற்போது செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதத்துக்கு மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் சரியான வெளியீட்டு தேதியை தேர்வு செய்ய படக்குழு ஆலோசனையில் இறங்கியிருக்கிறது.

SCROLL FOR NEXT