நடிகர் சிம்பு நடிப்பில் டிசம்பர் மாதம் வெளியாகவிருந்த வாலு திரைப்படம், பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
"ஒரு நடிகராக என்னுடைய கடமைகள் ஒரு எல்லைக்குள் உள்ளன. நடிப்பிலும், படத்திற்கு தேவையான சிறு சிறு விஷயங்களிலும் மட்டுமே எனது பங்களிப்பு இருக்கும். எனது பட வியாபாரத்தில் எந்த விதத்திலும் நான் தலையிடுவதில்லை. வாலு தள்ளிப்போனதில், எனது ரசிகர்களைப் போல எனக்கும் வருத்தம் தான். ஆனால் இந்த வியாபரத்துக்கென சில விதிகள் உண்டு. அதற்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும். வருத்தங்களை மீறி, 2015-ஆண் ஆண்டை, பிப்ரவரி மாதம் வாலு பட வெளியீடோடும், இது நம்ம ஆளு திரைப்படத்தின் வெளியீடை கோடை விடுமுறையிலும் எதிர்பார்க்கிறேன். "
இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்
விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம் 'வாலு'. தமன் இசையமைக்க, எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்துள்ளார்.