தமிழ் சினிமா

சூர்யாதான் கனவு ஹீரோ!

கா.இசக்கி முத்து

தமிழ் சினிமாவில் இப்போதைய பரபரப்பான நடிகை என்று லட்சுமி மேனனை சொல்லலாம். ஒரே நேரத்தில் 4 படங்களில் பறந்து பறந்து நடித்துக்கொண்டிரு்க்கும் அவரை ஒரு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் சந்தித்தோம்.

புதுப்படங்கள் எதையும் ஒப்புக்கொள்வது இல்லையாமே?

“இப்போதைக்கு சிப்பாய், பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தாண்டானு நாலு படங்கள் நடிச்சிட்டு இருக்கேன். புதுக்கதைகளை கேட்காமல் இல்லை. நல்ல கதைகள் வந்தால் உடனே கால்ஷீட் கொடுக்க நான் ரெடி.

இளம் ஹீரோக்களுடன் நடிக்க ஆரம்பிச் சிட்டீங்களே.. ஷுட்டிங்ல எதுவும் வித்தியாசம் தெரியுதா?

“கண்டிப்பா வித்தியாசம் இருக்கு. கெளதம் கார்த்திக் கூட சிப்பாய் படத்துல நடிச்சிட்டு இருக்கேன். ரொம்ப ஜாலியான டீம். கெளதம் கார்த்திக் என்னோட ஏஜ் குரூப் என்பதால் அவரோடு பழகுகிறது எனக்கு ஈஸியாக இருக்கு. அதுக்காக உடனே தப்பா நெனச்சுக்காதீங்க. இப்போதைக்கு கெளதம் கார்த்திக் எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட் அவ்வளவு தான்.”

லட்சுமிமேனன்னு சொன்னாலே கிராமத்துப் பெண்ணான ஒரு பொண்ணுதான் ஞாபகத்துக்கு வர்றாங்க. கமர்ஷியல் படங்கள் பண்ற ஐடியா இல்லையா?

“கமர்ஷியல் படங்கள்ன்னா கிளாமரா நடிக்க வேண்டியது இருக்கும். என்னை நான் டெய்லி கண்ணாடில பாக்கறேனே. கிளாமர் டிரெஸ் போட்டா எனக்கு அசிங்கமா இருக்கும். ஜிம்முக்கு போய் உடம்பை ஃபிட்டாக்கினா தான் எனக்கு கிளாமர் ரோல் நல்லா இருக்கும். இதனால் அறிவிக்கப்படுவது என்னவென்றால், கிளாமர் ரோல்ல நடிக்கவே மாட்டேன் அப்படினு சொல்லல. இப்போதைக்கு வேண்டாம்னு தான் சொல்றேன்.”

ரசிகர்கள் கிட்ட இருந்து வந்த மறக்க முடியாத கிஃப்ட்?

“எனக்கு இதுவரைக்கும் கிஃப்ட் எதுவுமே வரலை. பாவம் இல்லை நானு?!”

உங்க நட்பு வட்டம் எப்படி?

“சினிமால சொல்லணும்னா, கெளதம் கார்த்திக்க சொல்லலாம். எனக்கு இப்போதைக்கு க்ளோஸ் ப்ரெண்ட் அவர்தான். மத்தபடி எனக்கு எப்போதுமே க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்னா என்னோட ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் தான். அவங்களோட இருந்தா எப்போதும் ரணகளம் தான். ஒண்ணு சேர்ந்தோம்ன்னா ஒரே ஆட்டம் தான்.”

எந்த ஹீரோவோட நடிக்க அதிக ஆசைப்படறீங்க?

“கண்டிப்பாக சூர்யா சார் தான். அவர் என்னோட ட்ரீம் பாய். அவர் நடிச்ச காக்க காக்க, கஜினி படங்களை எல்லாம் எண்ண முடியாத அளவிற்கு பார்த்திருக்கேன். அவரோட நடை, உடை, ஸ்டைல் அப்படினு சூர்யா பண்ற எல்லாமே பிடிக்கும். சூர்யாவோடு நடிக்க தேதிகள் கேட்டா, கதையே கேட்காமல் என்னோட கால்ஷீட் ரெடி.. அவருக்கு அடுத்து, விஜய், அஜித்னு நான் சேர்ந்து நடிக்க ஆசைப்படறா ஹுரோஸ் லிஸ்ட் ரொம்ம்ம்ப பெரிசு. எல்லாம் நடக்கும்னு நம்பறேன்.. பார்ப்போம்..!

SCROLL FOR NEXT