சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஒரு கிடாயின் கருணை மனு' ஜுன் 2ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வித்தார்த், ரவீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ஒரு கிடாயின் கருணை மனு'. ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு, ரகுராம் இசையமைத்துள்ளார். ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பெர்லின் திரைப்பட விழா மற்றும் நியூயார்க் திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது படக்குழு.
தற்போது தமிழ் திரையுலகின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு இருப்பதால், ஜுன் 2ம் தேதி 'ஒரு கிடாயின் கருணை மனு' வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.