தமிழ் சினிமா

இரவு வரை நீடித்த பேச்சுவார்த்தை: சிக்கலின்றி வெளியானது மொட்ட சிவா கெட்ட சிவா

ஸ்கிரீனன்

மார்ச் 8-ம் தேதி இரவு வரை பேச்சுவார்த்தை நீடித்தது. இறுதியாக சிக்கலின்றி வெளியானது 'மொட்ட சிவா கெட்ட சிவா'.

சாய் ரமணி இயக்கத்தில் லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரான படம் 'மொட்ட சிவா கெட்ட சிவா'. ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் உருவான இப்படத்தின் வெளியீட்டு உரிமையை மதன் பெற்றிருந்தார்.

இப்படம் வெளியாகவிருந்த தருணத்தில் பணமோசடி விவகாரத்தில் மதன் கைது செய்யப்பட்டதால் இப்படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது. பைனான்சியர்கள் பலருடைய பணம் இதில் முடங்கியிருப்பதால், எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது.

பலதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு இன்று (மார்ச் 9) வெளியாகியுள்ளது. இறுதிகட்டத்தில் அரசு பிலிம்ஸ் நிறுவனம் தங்களுக்குத் தான் வெளியீட்டு உரிமையை வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவித்து தடை பெற்றார்கள்.

இதனால் இப்படம் வெளியாகுமா` என்று பரபரப்பு உண்டானது. இறுதியாக மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. இப்படத்துக்காக அரசு பிலிம்ஸ் நிறுவனம் கொடுத்த பணத்தில் பாதி இதிலும், மீதி பணத்தை அடுத்து மதன் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கவுள்ள படத்திலும் கொடுப்பதாகவும் தெரிவித்தார்கள். இதற்கு அரசு பிலிம்ஸ் நிறுவனமும் ஒப்புக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து இறுதிகட்டத்தில் நிலவிய சிக்கல் முடிவுக்கு வந்தது. க்யூப் நிறுவனத்திலும் அனைத்து சிக்கல் முடிந்ததால், படம் இன்று வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT