அஜித் படத்தை அமிதாப் பச்சன் தயாரிக்கவிருப்பதாக வெளியாகும் செய்திக்கு, அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்க இருக்கிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அப்படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் படத்தை அமிதாப் பச்சன் தயாரிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. ஏற்கனவே அமிதாப் பச்சன் தயாரித்த 'உல்லாசம்' படத்தில் நாயகனாக நடித்திருப்பவர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.
அமிதாப் தயாரிப்பில் அஜித் என்ற செய்தி வெளியானதற்கு, அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்திருக்கிறார். "’தல 58’ படத்தை தயாரிக்க இருக்கிறீர்களா?" என்று அமிதாப் பச்சன் ட்விட்டர் கணக்கை மேற்கோள் காட்டி ரசிகர் எழுப்பிய கேள்விக்கு "இல்லை" என்று பதிலளித்திருக்கிறார்.
சிவா இயக்கத்தில் உருவாகும் அஜித் படத்தைத் தொடர்ந்து, அவரது அடுத்த படம் என்ன என்பது இன்னும் உறுதியாகவில்லை.