'கவலை வேண்டாம்' படத்தைத் தொடர்ந்து ஜீவா நடித்திருக்கும் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படம் மே 19ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.
'கவலை வேண்டாம்' படத்தைத் தொடர்ந்து, புதுமுக இயக்குநர் ஐக் இயக்கத்தில் உருவான 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஜீவா. ப்ரியதர்ஷன், கமல்ஹாசன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் ஐக் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா ஆகியோர் ஜீவாவுடன் நடித்துள்ளார்கள். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்தை இயக்குநர் அட்லீ மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடித்து, இறுதிகட்ட பணிகளைத் துவக்கியது படக்குழு. மேலும், இப்படத்தின் வெளியீடு எப்போது என்பது தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் தணிக்கை பணிகள் முடிந்து மே 19ம் தேதி 'சங்கிலி புங்கிலி கதவ தொற' வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.