தமிழ் சினிமா

வீரம் - முன்னோட்டம்

செய்திப்பிரிவு

நீண்ட நாட்களுக்கு பிறகு கிராமத்து பின்னணி கதையில் அஜித் நடித்திருக்கும் படம் 'வீரம்'. ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது.

அஜித், தமன்னா, வித்தார்த், சந்தானம், வித்யூ ராமன், அப்புக்குட்டி என ஒரு நட்சத்திர பட்டாளத்தினை வைத்து இயக்கியிருக்கிறார் சிவா. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்திருக்கிறது.

அண்ணன் திருமணம் செய்து கொண்டால் தான் 4 தம்பிகளும் திருமணம் செய்து கொள்ள முடியும். இந்த கதைக்குள் எப்படி தமன்னா வருகிறார், வில்லன்களை எப்படி அஜித் எதிர்கொள்கிறார். இறுதியில் அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்து, தம்பிகளும் திருமணம் செய்து கொண்டார்களா என்பதே 'வீரம்' படத்தின் கதை.

எப்போதுமே அடிதடி பண்ணிக்கொண்டிருப்பதால், வீட்டிலேயே ஒரு வக்கீலை வைத்துக் கொள்கிறார்கள். அந்த வக்கீல் வேடத்தில் சந்தானம் தனது காமெடி பங்களிப்பை அளித்திருக்கிறார். முதல் முறையாக படம் முழுவதும் அஜித் வேஷ்டி சட்டையில் அஜித் நடித்திருப்பது இப்படத்தின் ஹைலைட்டாக அமைந்திருக்கிறது.

படத்தில் முதல் டீஸர், இரண்டாவது டீஸர், டிரெய்லர், பாடல்கள் என 'வீரம்' சம்பந்தப்பட்டவை வெளியான போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமன்றி நீண்ட நாட்கள் கழித்து அஜித் படத்தின் அனைத்து பாடல்களுமே மக்களிடம் வரவேற்பை பெற்றிருப்பது 'வீரம்' ஸ்பெஷல்.

அஜித்தின் வேஷ்டி சட்டை லுக், டிரெய்லரில் அஜித் போட்டிருக்கும் குத்தாட்டம் என அவரது ரசிகர்கள் இப்படத்தினை கொண்டாட காத்திருக்கிறார்கள். மக்களிடையேயும், பாக்ஸ் ஆபிஸிலும் தனது புஜத்தை சிலுப்பிக் கொண்டு 'வீரம்' சீறுமா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரியும்.

SCROLL FOR NEXT