தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷ் உடன் இணையும் சரத்குமார்

ஸ்கிரீனன்

சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சரத்குமார்.

'கடவுள் இருக்கான் குமாரு', 'ப்ரூஸ் லீ' ஆகிய படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அதனைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் மற்றும் சண்முகம் முத்துசுவாமி ஆகியோரது இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இப்படத்தை எம்.எஸ்.சரவணன் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சரத்குமார் ஒப்பந்தமாகி உள்ளார். இரு வேறு தோற்றத்தில் நடிக்கவிருக்கும் சரத்குமார், இப்படத்துக்காக வாள் சண்டை கற்றுக் கொண்டு வருகிறார்.

நாயகியாக வைபவி ஷண்டில்யா மற்றும் தம்பி ராமையா, ரோபோ சங்கர், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

SCROLL FOR NEXT