தமிழ் சினிமா

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு இன்று தேர்தல்: மாலையில் முடிவு அறிவிப்பு

செய்திப்பிரிவு

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. வெற்றி பெறும் அணி, பதவிகள் குறித்த விவரம் மாலை அறிவிக்கப்படும்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. 2017 2019ம் ஆண்டுக்கான தேர்தல் இன்று காலை சென்னை, அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடக்கிறது. இந்த தேர்தலில் ராதாகிருஷ்ணன், விஷால், கேயார் ஆகியோர் தலைமையிலான அணிகள் போட்டியிடுகின்றன. இதில் ராதாகிருஷ்ணன் தலைமையிலான அணிக்கும் விஷால் தலைமையிலான அணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் மேற்பார்வையில் நடைபெறும் தேர்தல் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய விவரம் மாலையில் வெளியிடப்படும்.

SCROLL FOR NEXT