தமிழ் சினிமா

திரை இசை : சங்கராபுரம்

கே.சந்துரு

ஷங்கர்- கணேஷ் ஜோடிக்குப் பின்னர் இசையுலகின் முக்கியமான இரட்டை இசையமைப்பாளர்கள் சபேஷ்-முரளி. தேவாவின் இசைக்குழுவில் முக்கிய அங்கம் வகித்த இந்த சகோதரர்கள் உரிய அங்கீகாரம் கிடைக்காதபோதிலும் தமிழ்த் திரை இசையுலகில் தொடர்ந்து இயங்கிவருகின்றனர். இவர்கள் இசையில் வெளிவந்துள்ள மற்றொரு படம் 'சங்கராபுரம்'. 'தூத்துக்குடி', 'மதுரை சம்பவம் ' போன்ற படங்களின் நாயகனான ஹரிகுமார் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். வாலிக்குப் பின்னர் நீண்ட காலம் பாடல் எழுதிவரும் முக்கியமான பாடலாசிரியரான கவிஞர் முத்துலிங்கம் இப்படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்.

ஆல்பத்தின் முதல் பாடலான 'இரவுச் சூரியன்' வழக்கமான தாளக்கட்டுடன் தொடங்கினாலும் சலிக்காத அதன் மெட்டால் கவர்கிறது. 'முத்துக்குளி ..முத்துக்குளி' பாடலை சத்யாவுடன் இணைந்து இசையமைப்பாளர் சபேஷ் பாடியுள்ளார். கானா பாடலின் தாளக்கட்டு இருந்தாலும், பாடல் பெரிதாகக் கவரவில்லை.

'வா பொன் நிலவே' பாடலின் தாளம், 'என்ன விலை அழகே' பாடலை நினைவூட்டுகிறது. மதுபாலகிருஷ்ணனின் கணீர்க் குரலும் உச்சரிப்பும் பாடலுக்கு பலம் சேர்க்கின்றன.

இந்தப் பாடலின் மற்றொரு வடிவமான 'வா பொன் மகளே' சத்யாவின் குரலில் இனிக்கிறது. எனினும் பெண் குரலை சிந்தசைஸ் செய்வது பாடலின் தன்மையை நீர்த்துப் போகச் செய்கிறது.

இந்தப் பாடலின் மற்றொரு வடிவமான 'வா பொன் மகளே' சத்யாவின் குரலில் இனிக்கிறது. எனினும் பெண் குரலை சிந்தசைஸ் செய்வது பாடலின் தன்மையை நீர்த்துப் போகச் செய்கிறது.

'முந்தா நாளு ஆளான பொண்ணு' என்றொரு துள்ளலிசைப் பாடல் இரண்டு முறை ஒலிக்கிறது. பூப்பெய்திய ஒரு பெண் அத்தனை சீக்கிரம் நடனமாட முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது!

SCROLL FOR NEXT