தமிழ் சினிமா

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு என்றென்றும் புன்னகை

ஸ்கிரீனன்

கிறிஸ்துமஸ் விடுமுறையை கணக்கில் கொண்டு 'என்றென்றும் புன்னகை' படத்தினை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

ஜிவா, த்ரிஷா, வினய், சந்தானம் மற்றும் பலர் நடிக்க 'என்றென்றும் புன்னகை' படத்தினை இயக்கியிருக்கிறார் இயக்குநர் அஹ்மத். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ராம் மற்றும் தமிழ் குமரன் இப்படத்தினை தயாரித்திருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. எவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்கிறதோ, அதே அளவிற்கு சந்தானத்தின் வசனத்தால் இப்படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களுக்கும் குவிந்தன.

இப்படம் எப்போது வெளியாகும் என்று கேள்வி நிலவிவந்தது. இந்நிலையில் இப்படத்தினை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் தளத்தில், “டிசம்பர் 20ம் தேதி 'என்றென்றும் புன்னகை' வெளியாகும்” என்று அறிவித்திருக்கிறார்.

கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளை கணக்கில் கொண்டு தான் இத்தேதியை தேர்வு செய்திருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT