விஜய் நடிக்க தான் இயக்கி வரும் படம் தீபாவளி அன்று வெளியாகும் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்துள்ளார்.
'ஜில்லா' படத்தினைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது.
கொல்கத்தாவில் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியது. அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராஜமுந்திரியில் ஜெயில் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.
மூன்று கட்ட படப்பிடிப்பிற்குப் பிறகு தற்போது இடைவெளி அறிவித்து இருக்கிறார்கள். நான்காம் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் விரைவில் தொடங்க இருக்கிறார்கள்.
ஜுலை மாதம் வரை படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து படத்தின் இறுதிகட்ட பணிகள் தொடங்கும். அனைத்து பணிகளும் முடிந்து, படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.
2012 தீபாவளிக்கு வெளியான 'துப்பாக்கி' படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததை மனதில் கொண்டு இப்படத்தினையும் தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
படம் தீபாவளி ட்ரீட்? என்ற கேள்விக்கு ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் வலைத்தளத்தில் ஆம் என்று பதிலளித்து உறுதி செய்திருக்கிறார். 'துப்பாக்கி' படத்தினைப் போலவே அடுத்த வெற்றிக்கு தயாராகி விட்டது கூட்டணி.