தமிழ் சினிமா

சாதனை படைக்குமா ஆரம்பம்?

ஸ்கிரீனன்

'ஆரம்பம்' படத்தின் டிக்கெட் விற்பனையைப் பார்க்கும்போது, இதற்கு முன்பு வந்த அஜித் படங்களின் வசூலை முறியடிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட ஓப்பனிங் கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித். அவரது படம் வெளியாகும் போது தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் மொய்த்துக் கொள்ளும்.

'பில்லா' படத்தினைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் - அஜித் இணைந்திருப்பதால், இதுவரை இல்லாத அளவிற்கு 'ஆரம்பம்' படத்திற்கு டிக்கெட் புக்கிங் வேகமாக நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்திற்கு பல்வேறு திரையரங்குகளில் ஃபுல்லாகி விட்டது.

தமிழ்நாட்டில் பெரிய விநியோக NSC ஏரியாவை ஐங்கரன் வாங்கியது. அவர்களிடம் இருந்து செங்கல்பட்டு ஏரியாவை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியது.

செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் 108 திரையரங்குகள் இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் பல்வேறு திரையரங்குகளில் 2ம் தேதி 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'பாண்டிய நாடு' படங்கள் வெளியாக இருக்கின்றன. 2 நாட்களுக்கு மட்டும் 'ஆரம்பம்' வெளியாகவிருக்கிறது.

மாயாஜால் திரையரங்கில் ஒரு நாளைக்கு 91 காட்சிகள் திரையிடலாம். 31ம் தேதி அனைத்து காட்சிகளுமே 'ஆரம்பம்' திரையிட இருக்கிறார்கள்.

சென்னை மட்டுமன்றி கோயம்புத்தூர், சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஏரியாக்களில் 'ஆரம்பம்' படத்தின் புக்கிங்கை பார்த்து விநியோகஸ்தர்கள் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

இதுவரை வெளிவந்துள்ள அஜித் படத்தின் வசூல் சாதனையைக் கண்டிப்பாக 'ஆரம்பம்' முறியடிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த டிக்கெட் புக்கிங்கை பார்த்து ஏ.எம்.ரத்னம் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார்.

SCROLL FOR NEXT