'ஆரம்பம்' படத்தினைப் பார்த்துவிட்டு ஆர்யா பாராட்டி இருக்கிறார் அஜித்.
தீபாவளி ரேஸில் மற்ற இரண்டு படங்களையும் முந்திக்கொண்டு இம்மாதம் 31ம் தேதியே திரைக்கு வரவிருக்கிறது 'ஆரம்பம்'. பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் ’யூ' சான்றிதழ் அளித்தார்கள்.
நேற்று சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டது மட்டுமன்றி, படத்தினை அஜித் மற்றும் ஷாலினிக்கும் திரையிட்டு காட்டியிருக்கிறார்கள்.
படத்தினைப் பார்த்துவிட்டு இயக்குநர் விஷ்ணுவர்தனை புகழ்ந்திருக்கிறார் அஜித். தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் இவ்வளவு பெரிய படம் அளித்ததற்கு நன்றி என்று விஷ்ணுவர்தனிடம் கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி, ஆர்யாவிற்கு போன் செய்து மிகவும் பாராட்டியிருக்கிறார். “நீங்கள் டாப்ஸியுடன் இணைந்து நடித்திருக்கும் காட்சிகளில் இளமை ததும்புகிறது. இளைஞர்களின் மத்தியில் உங்கள் நடிப்பிற்கு பெரும் பாராட்டு கிடைக்கும், கண்டிப்பாக ஆரம்பம் படத்திற்கு பிறகு உங்களது திரையுலக வாழ்க்கை உச்சித்தில் இருக்கும். தொடர்ச்சியாக வெற்றியை சுவைத்துக் கொண்டிருப்பதிற்கு பாராட்டுக்கள்” என்று ஆர்யாவிடம் தெரிவித்திருக்கிறார் அஜித்.
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நிறைய ஹீரோக்கள் இணைந்து நடிக்க முன்வருவார்கள் என்று தெரிவித்திருக்கிறார் .