மானபங்கம் செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், பாலிவுட் நடிகை சனா கான், அவரது பாய் பிரண்ட் இஸ்மாயில் கான் ஆகியோரை மும்பை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பாக பூனம் கன்னா என்ற பெண்ணை சனா கானும் இஸ்மாயில் கானும் கடந்த 21-ம் தேதி கைகளை பிடித்து முறுக்கி, தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இருவருக்கும் எதிரான தகவல் பத்திரிகையில் வெளியானதற்கு அப்பெண்ணே காரணம் என்ற சந்தேகத்தில் பேரில் இவர்கள் இப்பெண்ணை அழைத்து மிரட்டியதுடன் இவ்வாறு நடந்துகொண்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் மும்பை அம்போலி காவல் நிலைய போலீஸார் சனா கான், இஸ்மாயில் கான் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். இருவர் மீதும் பெண்ணை மானபங்கம் செய்தல், உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
சனாகான், சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, பயணம் உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.