'துப்பாக்கி' படத்தினைத் தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்திருக்கும் படத்திற்கும் 'கத்தி' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
விஜய், சமந்தா, சதீஷ், நீல் நிதின் முகேஷ் மற்றும் பலர் நடித்து வரும் படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை ஐங்கரன் மற்றும் லைக்கா நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், ராஜமுந்திரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. படத்தின் தலைப்பு என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. ’வாள்’ என்று பெயரிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு 'கத்தி' என்று தலைப்பிட்டு இருப்பதாக தனது ட்விட்டர் தளத்தில் கூறியிருக்கிறார். இத்தலைப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.