தமிழ் சினிமா

டிசம்பர் 15 முதல் ஜில்லா இசை

ஸ்கிரீனன்

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜில்லா' படத்தின் இசை வெளியீடு, டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

விஜய், காஜல் அகர்வால், மோகன்லால், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'ஜில்லா'. இமான் இசையமைக்க, நேசன் இயக்கி வருகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பொங்கல் வெளியீடாக வெளிவரவிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு எப்போது என்ற கேள்வி நிலவி வந்தது.

இந்நிலையில், 'ஜில்லா' இசை வெளியீட்டு விழா டிசம்பர் 15ம் தேதி வெளியிடப்படும் என்றும், டிரெய்லரும் அதே தினத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.

இமான் இசையில், இப்படத்திலும் விஜய் ஒரு பாடலை பாடியிருப்பதால், படத்தின் பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் ஜல்லிக்கட்டில் 'ஜில்லா' விநியோக உரிமை, திரையரங்க ஒப்பந்தத்தைத் தொடர்ந்து படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடும் அறிவித்துவிட்டதால், 'ஜில்லா' முதல் ஆளாக சீறிப் பாய இருக்கிறது.

SCROLL FOR NEXT