தமிழ் சினிமா

நடிகர் ஜி.வி.பிரகாஷுக்கு ரஜினிகாந்த் பாராட்டு

ஸ்கிரீனன்

ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படக்குழுவுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அத்துடன், ஜி.வி.பிரகாஷின் நடனத்தையும் அவர் பாராட்டியுள்ளார்.

சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வந்தது.

தலைப்பின்றி தொடங்கப்பட்ட இப்படத்துக்கு தற்போது 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். 'பாட்ஷா' படத்தில் ரஜினியின் பிரபலமான வசனம் என்பதால் '2.0' படப்பிடிப்பு தளத்தில் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றது படக்குழு.

அப்போது ஜி.வி.பிரகாஷிடன் ரஜினி, "இது என்னோட பிரபலமான வசனம். நல்லாயிருக்கும். நல்ல பண்ணுங்க. உங்களது நடனத்தை எல்லாம் பார்த்தேன். ரொம்ப நல்ல ஆடுறீங்க. நடனப்பள்ளி எதுவும் போனீங்களா?" என்று விசாரித்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து இயக்குநர் சாம் ஆண்டனும் சென்றிருக்கிறார். அவருக்கு ரஜினி தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 60% முடிவடைந்து விட்டது, இன்னும் சில நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்து இறுதிகட்டப் பணிகள் துவங்கப்படும் என்கிறது படக்குழு.

SCROLL FOR NEXT