தமிழ் சினிமா

ஏப்ரல் 14-ல் வெளியாகிறது சிவலிங்கா

ஸ்கிரீனன்

பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'சிவலிங்கா', ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'சிவலிங்கா'. இது கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'சிவலிங்கா' படத்தின் தமிழ் ரீமேக்காகும்.

இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்து, சரியான வெளியீட்டுத் தேதிக்காக காத்திருந்தார்கள். பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகும் என அறிவித்தார்கள். ஆனால், அதே தேதியில் லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'மொட்ட சிவா கெட்ட சிவா' படமும் வெளியாவதாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து லாரன்ஸ் வேண்டுகோளுங்கு இணங்க வெளியீட்டை ஒத்திவைத்தார்கள். ஆனால், பைனான்சியர்கள் பிரச்சினையில் பிப்ரவரி 17-ம் தேதி 'மொட்ட சிவா கெட்ட சிவா' வெளியாகவில்லை.

இந்நிலையில், ஏப்ரல் 14-ம் தேதி 'சிவலிங்கா' வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT