தமிழ் சினிமா

ஆர்யாவுடன் மீண்டும் இணையும் டாப்ஸி

ஸ்கிரீனன்

'மீகாமன்' படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக டாப்ஸியை ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம்.

’முன்தினம் பார்த்தேனே’, 'தடையற தாக்க' ஆகிய படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி. தனது அடுத்த படத்தில் ஆர்யாவை இயக்கி வருகிறார். படத்திற்கு 'மீகாமன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. "படத்தின் நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேசி வருகிறோம். விரைவில் அறிவிப்பு வரும்" என்று தெரிவித்தார் மகிழ்திருமேனி.

இந்நிலையில், 'ஆரம்பம்' படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்த டாப்ஸி மீண்டும் 'மீகாமன்' படத்தில் ஆர்யாவோடு இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கோவா பின்னணியில் நடைபெறும் ஒரு ஆக்‌ஷன் கதை தான் 'மீகாமன்' என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT