கெளதம் மேனன் இயக்கத்தில் தயாராகி வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தில், அஜித் மூன்று கெட்டப்களில் தோன்ற இருக்கிறார்.
அஜித், அனுஷ்கா, விவேக், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் கெளதம் மேனன். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை தயாரித்து வருகிறார் ஏ.எம்.ரத்னம்.
அஜித், த்ரிஷா இருவரும் கணவன், மனைவியாக நடித்து வருகிறார்கள். மலையாளப் படமான ‘ஐந்து சுந்தரிகள்’ படத்தில் நடித்ததற்காக மாநில விருது பெற்ற அனிகா, அஜித்திற்கு மகளாக நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு குறித்து எதுவும் வெளியிட அவசரப்பட வேண்டாம் என்று முடிவு எடுத்திருக்கும் படக்குழு, முதலில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கலாம் என்ற தீர்மானித்தில் இருக்கிறது.
தற்போது ஹைதராபத்தில் அஜித், அருண்விஜய், அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளைக் காட்சிப்படுத்தி வருகிறார்கள்.
இப்படத்தில் அஜித் மூன்று வித கெட்டப்களில் தோன்ற இருக்கிறார். ஏற்கனவே இரண்டு கெட்டப்கள் இணையத்தில் வெளியாகி இருக்கும் நிலையில், அஜித் தாடியுடன் நடித்து வருவது போன்ற படப்பிடிப்பு படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
இப்படத்தின் இசையினை நவம்பர் மாத இறுதியில் வெளியிடவும், அதனைத் தொடர்ந்து படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறை அல்லது பொங்கலுக்கு வெளியிடலாம் என்றும் தீர்மானித்து இருக்கிறார்கள்.