தமிழ் சினிமா

2.0 படத்தை விளம்பரப்படுத்த சர்வதேச சுற்றுப்பயணம்: தயாரிப்பு நிறுவனம் தகவல்

ஸ்கிரீனன்

'2.0' படத்தை விளம்பரப்படுத்த சர்வதேச சுற்றுப்பயணம் விரைவில் துவங்கும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷயகுமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள '2.0' படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை விளம்பரப்படுத்தும் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை.

ஜனவரி 2018-ல் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை விரைவில் துவங்கவுள்ளது படக்குழு. லைகா நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகியான ராஜூ மகாலிங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT