தமிழ் சினிமா

ஹுத்ஹுத் புயல் நிவாரணத்துக்கு சூர்யா, கார்த்தி, விஷால் நிதியுதவி

ஸ்கிரீனன்

ஹுத்ஹுத் புயலின் நிவாரணத்துக்கு தமிழ்த் திரையுலகில் இருந்து சூர்யா, விஷால், கார்த்தி ஆகியோர் நிதியுதவி வழங்கியிருக்கிறார்கள்.

கடலோர ஆந்திரா, ஒடிஸா மாநிலங்களில் சில மாவட்டங்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை 'ஹுத்ஹுத்' புயல் புரட்டிப் போட்டது. குறிப்பாக விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. புயல் கரையைக் கடந்து 3 நாட்களான பின்னரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பவில்லை. கடலோர ஆந்திராவில் தொடர்ந்து சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கு தெலுங்கு திரையுலக நடிகர்கள் பலரும் நிவாரணத்துக்கு நிதியுதவி அளித்திருக்கிறார்கள். தமிழ் திரையுலகில் இருந்து சூர்யா, விஷால், கார்த்தி ஆகியோர் நிதியுதவி கொடுத்திருக்கிறார்கள்.

சூர்யா ரூ.25 லட்சம், கார்த்தி ரூ.12.5 லட்சம், விஷால் ரூ.15 லட்சம், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ரூ.12.5 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து பல்வேறு தமிழ் திரையுலக நடிகர்களும் நிதியுதவி அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT