தமிழ் சினிமா

மைசூர் கோயிலில் தொடங்கியது ரஜினியின் ‘லிங்கா படப்பிடிப்பு: அட்சய திரிதியை தினத்தில் பூஜையுடன் விழா

இரா.வினோத்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘லிங்கா’ படத்துக்கு மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் அட்சய திரிதியை தினமான வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு பூஜை போடப்பட்டது.

ஏற்கெனவே ரஜினியும் கே.எஸ்.ரவிகுமாரும் இணைந்த 'ராணா' படம் முதல்நாளே நின்று போனதால், இந்நாளில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டதாக கூறப்ப டுகிறது

‘கோச்சடையான்’ திரைப்படத்தை தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத் தில் ரஜினிகாந்த் 'லிங்கா' படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ் காவும்,சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கிறார்கள்.

ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படத்தின் கதை, வசனம் 'சாருலதா' பொன். குமரன் எழுதுகிறார். இப்படத்தில் தந்தை,மகன் என இரண்டு வேடங்களில் ரஜினி நடிப்பதாகக் கூறப்படுகிறது.

படப்பூஜையில் ரஜினியின் நெருங்கிய நண்பரும்,கர்நாடக வீட்டுவசதித் துறை அமைச்சரும், நடிகருமான அம்பரீஷ், அவருடைய மனைவி நடிகை சுமலதா,இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்,தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் 'லிங்கா' படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

ஒன்றரை மணி நேர பூஜைக்குப் பிறகு,சாமுண்டீஸ்வரி மலையில் உள்ள கணேஷா கோயில் எதிரே இருக்கும் மண்டபத்தில்,ரஜினி சாமி கும்பிடுவது போல முதல் காட்சி படமாக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும், நடிகர் அம்பரீஷும் ரஜினிக்கு மாலை அணிவித்தனர். அதன் பிறகு ரஜினியும் ராக்லைன் வெங்கடேஷும் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருக்கு மாலை அணிவித்தனர்.

ரஜினி வழக்கமான பட்டு வேட்டி, சட்டை அணிந்து முறுக்கிய மீசையுடன் 'லிங்கா' கெட்டப்பில் தோன்றினார்.

ராசியான இடங்களில் ஷூட்டிங்

மைசூரை சுற்றியுள்ள ஊர்களில் படமாக்கப்பட்ட ரஜினியின் பெரும் பாலான படங்கள் வெற்றிப்படங்க ளாயின. எனவே மைசூர் ரஜினிக்கு ராசியான ஊராகக் கருதப்படுகிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த முத்து, படையப்பா ஆகிய இரண்டு படங்களின் பெரும்பாலான காட்சிகள் மைசூரை சுற்றியே படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதத்திற்கு முன்பே ரஜினியும், ரவிகுமாரும் ரகசியமாக மைசூருக்கு வந்து ஷூட்டிங் கிற்கு தேவையான லொகேஷன் களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

மைசூர் சாமுண்டீஸ்வரி மலை, கிருஷ்ண ராஜ சாகர் அணையை சுற்றியுள்ள பகுதிகள், மண்டியா, ஸ்ரீரங்கப் பட்டினம், மஹாதேவபுரா,மற்றும் மேல்கோட்டை ஆகிய இடங்களில் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் காட்சிகள் சுமார் 40 நாட்கள் படமாக்கப்படவுள்ளன.

அனுமதி மறுத்த மைசூர் பேலஸ் நிர்வாகம்

மைசூர் அரண்மனையில் ரஜினியின் பட ஷூட்டிங்கிற்காக 10 நாட்கள் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், அரண்மனை நிர்வாகத்தினர் ஷூட்டிங்கிற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். ரஜினியின் நண்பர் அம்பரீஷ் மூலமாக பேசியும்,'கடந்த 10 ஆண்டுகளாக சினிமா ஷூட்டிங்கிற்கு அனுமதி தருவதில்லை’ என கைவிரித்து விட்டனர்.

எனவே, அதற்கு மாற்றாக ரஜினி நடிக்கும் பாடல் காட்சிகளை மைசூரில் உள்ள ஹோட்டல் லலித் மஹால் பேலஸில் மே 6 மற்றும் 7 தேதிகளில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT