தமிழ் சினிமா

ரெமோ இயக்குநரின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறார் ராஜா

ஸ்கிரீனன்

'ரெமோ' முதல் பிரதியைப் பார்த்துவிட்டு இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனின் அடுத்த படத்தையும் தயாரிக்க இருக்கிறார் ராஜா.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் படம் 'ரெமோ'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் ராஜா தயாரித்து வருகிறார்.

செப்டம்பர் 5-ம் தேதி இப்படத்தின் முழு இசையையும் வெளியிட படக்குழு முடிவுசெய்திருக்கிறது. அக்டோபர் 7-ம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இசை வெளியீட்டைத் தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

இப்படத்தின் முதல் பிரதியை தயாரிப்பாளருக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார்கள். சிறப்பாக வந்திருப்பதைத் தொடர்ந்து படக்குழுவை வெகுவாக பாராட்டிய தயாரிப்பாளர் ராஜா, 'ரெமோ' இயக்குநர் பாக்யராஜ் கண்ணனின் அடுத்த படத்தையும் தயாரிக்க இருக்கிறார்.

மேலும், அனிருத்தின் பின்னணி இசை மற்றும் ரசூல் பூக்குட்டியின் ஒலியமைப்பு ஆகியவை முடிந்தவுடன் இன்னும் மெருகேறும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

SCROLL FOR NEXT