இளைஞர்கள் போராட்டத்தில் சினிமா நட்சத்திரங்கள் பங்கெடுத்து அந்த கவன ஈர்ப்பை பெறக்கூடாது என கமல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
இளைஞர்கள் ஒன்றுக்கூடி நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இப்போராட்டம் தொடர்பாக கமல், "குரல் கொடுக்க வேண்டிய கடமையை மாணவர்கள் கையில் எடுத்துள்ளார்கள். அது அவர்களின் குரலாக இருக்க வேண்டும்.
முதல் முறையாக பெருமைப்படும் அளவுக்கு நல்ல முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற ஒட வைத்திருக்கிறார்கள்.
இதில் சினிமா நட்சத்திரங்கள் பங்கெடுத்து அந்த ஒளியை வாங்கிக் கொள்ளக் கூடாது என நான் நினைக்கிறேன். இது அவர்களுடையப் போராட்டம். நாளைய அரசியல்வாதி அங்கு இருக்கக்கூடும். ஆகவே அவர்களை மிரட்டக் கூடாது. அறப்போராட்டத்தில் ஈடுபடும் அவர்களை தடுக்கும் அருகதை யாருக்கும் இல்லை" என்று தெரிவித்துள்ளார் கமல்