வாழ்க 'கேலிகூத்து நாயகம்' என்று தமிழக நிகழ்வுகள் குறித்து கமல் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்துள்ளார். சட்டப்பேரவைக்குள் தான் தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.
காலையிலிருந்து எம்.எல்.ஏக்களின் தொடர் அமளியால் சட்டப்பேரவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை சுற்றிலும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து கமல்ஹாசன், "நீங்கள் யாரென்று காட்டிவிட்டீர்கள். மற்றொரு முதலமைச்சர் நமக்கு கிடைத்துவிட்டார் எனத் தோன்றுகிறது. வாழ்க கேலிகூத்து நாயகம். தமிழக மக்கள் அவர்களுடைய எம்.எல்.ஏக்களை முறையாக வரவேற்க வேண்டும். வீட்டில் அவர்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்குமோ, அப்படிப்பட்ட வரவேற்புடன்" என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்