தமிழ் சினிமா

சத்தியாகிரக போராட்டத்தை நினைவூட்டுகிறது: அனிருத்

ஸ்கிரீனன்

இளைஞர்களின் போராட்டம் சத்தியாகிரக போராட்டத்தை ஞாபகப்படுத்துவதாக அனிருத் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு தமிழ் திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அனிருத் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியதாவது,"ஜல்லிக்கட்டு நமது அடையாளம். உலகம் முழுவதும் நடைபெறும் அமைதி வழிப் போராட்டத்தைப் பார்க்கும் போது சத்தியாகிரக போராட்டம் ஞாபகம் வருகிறது.

தமிழனாக பெருமை கொள்கிறேன். ஜல்லிக்கட்டுக்கு எனது ஆதரவு உண்டு" என்று தெரிவித்துள்ளார் அனிருத்.

SCROLL FOR NEXT